பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 டட்டிருக்கிருேம்; கண் கூடாகக் கண்டுகொண்டிருக்கிருேம். ஆ ன ல், முறையற்ற வழியில் சென்றவர்களுக்கும் கூட சிலை யெடுத்த விநோதத்தையும் சரித்திரம் நமக்குச் சாற்றுகிறது. மு ன் ளுள் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ளும் கிரேக்க வீரர்கள், வெற்றி பெறுவதற்காகத் தவருன முறைகளைப் பின் பற்றின. ல் அவர்களுக்குத் தண்டனை அபராதம் மட்டுமல்ல; அவர்களைப் போலவே சீலேயமைத்து, பந்தயக்களத்தின் தலை வாசலிலே நிறுத்தி, அவமானப் படுத்து வார்கள். அவமானப்படுத்துவதால் மட்டும் அக்கிரமம் மறைந்து விடுகிறதா ? வெற்றி தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட் டால், மானம், மனிதப் டன் பு அத்தனையும் அல்லவா உடனே மறைந்து போகிறது ! பதவியும், பணமும் முரட்டுத்தனமும் சேர்ந்து கொண்டு எதிரிகளை அடக்கிவிடு கின்றனவே. இந்த அற்பக் குணம் சாதாரண மக்களிடத் தான் இருக்கிறதா என்ருல், சாம்ராஜ்யத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தியிடங்கூட இருக்கிறது என்று அறியும்போது, எங்கிருந்தாலும் "மனிதன் மனிதன் தான் என்று எண்ணவே. தோன்றுகிறதல்லவா ! கால் பந்தாட்டப் போட்டி ஒன்று நடந்து கொண்டிருக் கிறது. அதில் போலீஸ் இன் ஸ்பெக்டர் ஒரு குழுவிலும், அவரின் கீழ் பணியாற்றும் போலீஸ் எதிர்க் குழுவிலும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இன்பெக்டரின் முகம் கோபத்தால் அடிக்கடி மாறுவதை போலீஸ்காரர் பார்த்து, விடுகிரு.ர். இலக்குக் காவலராகப் பணியாற்றும் அந்தப் போலீஸ், தன் ஆன நோக்கிப் பந்து டன் வரும் இன் ஸ்பெக்டரைத் தடுக் காமல் உத்தியோக பாணி யில் 'சல்யூட்" அடித்து நிற்கிருர். ப்ந்து இலக்கினுள் நுழைகிறது, இன் ஸ்பெக்டர் வெற்றி பெற்ற ஆனந்தத்தில் பூரிப்படைகிருர்,