பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 இந்தக் கதை உண்மையோ, கற்பனையோ நமக்குத் தெரியாது. எல்லோரும் பேசி மகிழ்கின்ற விநோதமான நிகழ்ச்சி என்றா லும், இது போன்ற உண்மை நிகழ்ச்சி இல்லாமல் இல்லை. சாதாரணமானவர்களின் கதையைக் கேட்டோம். சக்கரவர்த்தி செய்த அக்கிரமத்தைக் கேளுங்கள். ரோம் சாம்ராஜயத்தை ஆண்ட நீரோ, நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான வர்தான்; ரோம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ என்பவரும் இவரேதான், இவருக்கு ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றிவீரராக வர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதற்காக, தன்னுடன் போட்டிகளில் கலந்துகொள்ள 5000 ஆட்களை அழைத்துச் சென்று தன்னுடன் போட்டியில் பங்கு பெறச் செய்தார் ! பிற கென்ன ? அவர் போட்டியிட்ட அத்தனைப் போட்டிகளிலும் அவரேதான் வெற்றி வீரராக வந்தார். அதற்கு இதோ ஒரு சான்று. தேரோட்டும் பந்தயப் போட்டியில் கலந்துகொண்டார் நீரோ ! அவருடன் போட்டியிட்டவர்கள் அவரது அடி யாட்கள்தானே ! பாதி வழியில் வந்து கொண்டிருந்தநீரோ, தேரிலிருந்து தவறி கீழே விழுந்து விடுகிறார். பின்னால் வந்து கொண்டிருந்த அத்தனைப் போட்டியாளரும். வேக மாகத் தேரை ஓட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே முறை ! அப்படிச் செய்தால் அவர்கள் கதி என்னாவது ? புறப்படுகின்ற வரைக்கும் எல்லோரும் நின்றுகொண்டே யிருந்தனர். நீரோ தேரை ஓட்டிச் சென்று எல்லையை முதலாவதாக அடைந்து வெற்றிப் பரிசை தட்டிச் செல்கிறார் ! விநோதமான வெற்றிப் பரிசல்லவா ! இப்படி நடக்கின்ற விநோதங்கள் வெற்றிக்காக மட்டுந் தான் நடக்கும் என்பதல்ல. விளேயாடுவோரிடத்திலும் நடக்கும். வேடிக்கைப் பார்க்க வருகின்றவர்களிடங்கூடத்