பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


செல்வத்தைச் சேகரிக்க முயன்ற இன்னலைவிட, அதைக் காப்பதற்காகப் படுகின்ற தொல்லை. அதற்காகச் சிந்திக் கின்ற நேரம் இவைகளைக் கணக்கிட்டால், வாழ்க்கையில் அவர்கள் தங்களுடைய உடலைப்பற்றி சிந்திக்கின்ற நேரம் சிறிதளவுதான். ஆளுகின்ற அரசன் எப்பொழுது அயருவான், அந்த நாட்டில் குழப்பங்களை உண்டு பண்ணிக் கைப்பற்றலாம். என்று கொக்கென ஏங்கி நிற்கும் பகையரசன் போல, உடலைக் காப்பாற்றும் அணுக்களே நோய்தரும் அணுக்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, நாம் களைக்கும் நேரம். நம்மைக் கவ்விக் கொள்ள நோய் கூட்டம் எப்பொழுதும் காத்துக் கிடக்கின்றன. பூத்துக் குலுங்கும் புது மலர்ச் சோலையாக வாழ்க்கை அமையப் பணத்தை ஈட்டப் போய், நோய்களையும் கவலை களையும் சுமந்து திரிகின்ற காட்சி, குளிக்க போய்ச் சோற்றைப் பூசிக்கொண்டு வந்த கதையாகத்தான் இருக்கிறது. ஆகவே, வரும் துயரை முன்னறிந்து காப்பதே அறி வுடைமை. வந்த பின் காப்பது செத்த பிணத்திற்கு பூ மாலை சூட்டுவது போலாகும். அணையை வெள்ளம் வருவதற்கு முன் கட்டவேண்டும். அந்த அணையாக, அருமை வழிகாட்டும் துணையாக இன்று நமக்குக் கிடைத் திருக்கும் ஊன்றுகோல்தான் உடற் கல்வியாகும். உடலும் உள்ளமும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக, ஒன்றின் உயர்விலே தானும் உயர்ந்து, தாழ்ந்த நேரத்திலே தாழ்ந்து இணைபிரியாத நிலையிலே இயங்கி வருகின்றன. நோய்வாய்ப்பட்டு நொந்து கிடக்கும் மனிதன், நொடிப் பொழுதேனும் நிம்மதியாக இருப்பதில்லை. உள்ள வேதனை யடைந்தவனோ உடலை மறந்து இன்னும் உலகையே மறக்கும் நிலைக்கு வந்து விடுகிறான்.