பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


91 ஆகவேதான், இன்றைய நிலையில் தேவையானது உடற் கல்வியின் உற்ற துணையே. சுவரை வைத்தே சித்திரம். பாதை அமைத்த பின்னே பயணம். உடலை வைத்தே உயிர்ப் பாதுகாப்பு. நல்ல மக்களே நலமுள்ள வலியுள்ள வீரர்களைப் பெற்ற பின்பே நாட்டின் பாதுகா4*8 சி' உடல் வலிவற்றவர்களுக்குப் போப் பயிற்சி உப்யோக மற்றது. கோழை பின் கையில் படையும், குர ங்கின் கையில் கொள்ளியும் எவ்வாறு ஆபத்தை விளக்குமோ அதே நிலை தான் நலிந்தவர்களுக்கு இராணுவப் பயிற்சி. எனவேதான், உடலைத் திறநிலக் குக் கொண்டு வரவும். உள்ளத்தைப் பக்குவப்படுத்தி விரிந்த நோக்கத்தை உண்டாக்கவும், ஒற்றுமை, கூட்டுறவு, தன்னம்பிக்கை பொதுநலப் பணி முதலிய பண்புளைப் பெறவும் உதவுகின்ற உடற் கல்வியை செழிப்புள்ளதாக்கி, அதன் மூலம் சிறந்த மக்களைப் பெற்று நாட்டையும் நாட்டு மக்களையும், காப்பது அரசினர் கடமை. - உலகம் போற்றுகின்ற உவர்ந்த கல்வியை, உயர்ந்த குறிக்கோளைப் பெற்று இலங்குகின்ற சிறந்த கல்வியை, குடியரசின் நோக்கத்தை நடைமுறையில் மறைமுகமாக செய்து வருகின்ற ஒப்பற்ற கல்வியை. அதன் பெருமையை போற்றுவதோடு நில்லாமல். அதன் வளர்ச்சிக்கு வாழ் வமைத்து வழியமைத்துத் தருசிசி நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். o