பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 அழியாத பொருள் ஒன்றைப் படைக்கும் ஆசை ஆண்டவனைப் பிடித்தாட்ட, அவனும் வந்து எழிலான உயிர்ஒன்றைப் பிடித்தான். எங்கும் இணையில்லாத உடலுள்ளே இணைத்தான். நல்ல மொழிபேசும் வல்லமையைக் கொடுத்தான். நாளும் முழுவாழ்வைப் பெறுவதற்கு இதயம் தந்தான். அழியாத பொருள் ஒன்று புகழேஎன்று ஆண்டவனே அறிந்தான். பின் மனிதன் வந்தான். முகத்தினிலே தனியழகு; மேனி எங்கும் முடியில்லாத கனியழகு; விரல் முகத்தில் நகத்திருக்கும் மெருகழகு; இரண்டே காலால் நடக்கின்ற நடையழகு; கோரைப் பற்கள் மிகநீண்டு தேய்ந்தழிந்து மென்மை யாகி வெண்மையுடன் வாயழகுக் காட்ட வைத்தே இகவாழ்வில் விலங்கினத்தில் பிரித்தான் நம்மை இறைவனுக்கு எவ்வளவு வேலை பாரீர்! உருண்டோடும் உலகினிலே பிறந்தோம்! எண்ண உணர்வோடும் நிலையினிலே மகிழ்ந்தோம்! இன்பம் திரண்டோடும் வாழ்வினையே நினைத்தோம்! வாசல் திறந்தோடும் ஆசையிலே நனைத்தோம்! தோற்று மருண்டோடும் நேரமெல்லாம் குமைந்தோம்! நெஞ்சை மறந்தோடும் வழிகாண முனைந்தோம்! ஆனால் பருந்தோடு நிழல்போல துன்பம் சேர்ந்து பறக்கையிலே நம்வாழ்வு சிறப்ப தெங்கே?