பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


சிரிக்கின் றோம்! சிந்தனையில் தேகம் துள்ள சிலிர்க்கின்றோம்! கற்பனையின் சிறகு தம்மை விரிக்கின் றோம்! வந்துவிடும் இனிமை எண்ணி விளிக்கின்றோம் சொந்தமென மனதுக் குள்ளே வரிக்கின் றோம்: விந்தைமிகு வாழ்வு தனில் விழிக்கின் றோம்! ஆறறிவை வைத்துக் கொண்டு: இருக்கின்றோம் மனிதரென! மனித ராக இருப்பதற்கு நாம்செய்த முயற்சி என்ன? ஒற்றையடிப் பாதையென ஒடுங்கும் நெஞ்சம்! உச்சிவெயில் நிழலாகக் குறுகும் எண்ணம்: கற்றைமுடிக் குழலாக சிக்கும் நெஞ்சம்! கட்டவிழ்ந்த காலை யெனக் குதிக்கும் எண்ணம்! குற்றுயிரில் புழுபோலத் துடிக்கும் நெஞ்சம்! குளத்தினிலே எருமையெனக் கலக்கும் எண்ணம் பற்றோடும் பணத்தோடும் பதவி யோடும் பதைபதைத்தே தினந்தோறும் தேய்கின் றோம்நாம் பசியென் றால் ருசியறியும் நாக்கு! பாசப் பரிவென் றால் வழியறியும் நெஞ்சு! நல்ல இசையென்றால் தான் திரும்பும் காது! காலை இளம்பரிதி தனிலரும்பும் 'போது'! வீசும் திசையோடு நின்றாடும் பட்டம்! பூசும் s திறத்தோடே கொண்டாடும் தேகம்! என்றும் விசையோடு வாழ்க்கையிலே வாழ வேண்டும்! விளங்காமல் நோய் சுமந்தே வாழ்கின் றாரே!