பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95 பட்டமரம் நிழல்தருமோ ! திரிந்து போன பால் தனிலே தயிர்வருமோ ! சேற்றில் வீழ்ந்து விட்டமலர் மணந்தருமோ ! எண்ணெய் தீர்ந்த விளக்கினிலே ஒளிவருமோ !! வெம்பி வீழ்ந்து கெட்டகனி சுவைதருமோ ! கிடையா தென்ருல் கீழாக்கிப் பாழாக்கும் நோய்க்குள் வீழ்ந்து விட்டஉடல் வாழ்வினிலே தருவதென்ன ? விளையாட்டே உடல்காக்கும் ! உணர்வார் யாரோ? காவிரியின் பசுமையெல்லாம் நீரோட்டத்தால் ! கற்பனையின் இசைவெல்லாம் கண்னேட்டத்தால் ? பூவிரிக்கும் புதுமையெல்லாம் தேனூட்டத்தால் ! பொன்விரிக்கும் பெருமையெல்லாம் மண்ணுரட்டத்தால் : பாவிரிக்கும் இனிமையெல்லாம் சொல்லூட்டத்தால் : பயன்விளக்கம் செயல்எல்லாம் பண்பூட்டத்தால் : நாவிரிக்கும் நன்மையெல்லாம் விளையாட்டாலே ! நல்லமைதி வாழ்வூட்டும் உடல் ஊட்டத்தால் ! காற்றென்ருல் உயிர்காக்கும் மூச்சாய் நின்று ! கனியென்ருல் பசிதீர்க்கும் உணவாய் சென்று : ஊற்றென்ருல் துயர்போக்கும் தாகம் வென்று ! உரமென்ருல் பயிர்வளர்க்கும் உள்ளாய் நின்று ! நேற்றின்று நாளையென நினைவில் கொண்டு நிலையான நல்வாழ்வை மக்கட் கீய தோற்றந்தான் கொண்டது.வே விளையாட் டெல்லாம் ! தொட்டார்க்கும் தொடர்ந்தார்க்கும் சொர்க்கம்:ஈதே ! எஸ். கவராஜ் செல்லையா