பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

 சேக்சன் மொழியில், Plega என்றும் கூறுகிறார்கள் அதற்கு, சண்டை போடு, போரிடு என்றும், விளையாடு என்றும் பல பொருள்கள் உண்டு.

இலத்தின் மொழியில் Plega என்ற சொல்லுக்கு, வேகமாக அடி, தள்ளு என்பது பொருளாகும். ஆகவே, உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் விளையாட்டு என்றால் விருப்பமான வழியில், உடலை இயக்கி இன்பம் அடைகின்ற ஒர் இனிய பயன் மிகுந்த செயலையே குறிக்கக் காண்கிறோம்.


2. கால் பந்தாட்டம்

கீழே கிடக்கும் ஒரு பொருளைக் காலால் உதைத்து மகிழும் பழக்கம், ஆதிகால மனிதர்களிலிருந்து, இன்றைய குழந்தை முதல் முதியோர் வரை தொன்று தொட்டு நிலவி தொடர்ந்து வருவதாகவே இருந்து வருகிறது.

காலால் பந்தை உதைத்து விளையாடும் ஆட்டம் என்றதும், எங்கள் நாட்டிலும் இது போன்ற ஒரு அமைப்புள்ள ஆட்டம் இருந்திருக்கிறது என்று சொல்ல, எல்லா நாடுகளுமே முன் வந்து, விண்ணப்