பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
 


பித்து, விளம்பரப்படுத்திக் கொள்கின்றனவே தவிர, 'இதுதான் சான்று, இப்படித்தான் இருந்தது' என்று எந்த நாடும் வெளியிடவில்லை. உறுதிப்படுத் தவும் இயலவில்லை.

பாபிலோனியா, பழங் கிரேக்கம், ரோம், எகிப்து, சீனம் போன்ற நாடுகளில் கிடைக்கும் குறிப்புகளும் இத்தகைய முறையில்தான் அமைந்துள்ளன.

முறையான வடிவான ஒரு வரலாற்று அமைப்பானது, இந்தக் கால் பந்தாட்டத்திற்கென்று, கி.பி 11ம் நூற்ருண்டிற்குப் பிறகு, இங்கிலாந்திலிருந்தே கிடைக்கின்றது.

கி.பி 1016-1042க்கிடையே இங்கிலாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர்கள், பழைய போர்க்களப் பகுதி ஒன்றை அகழ்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ஒரு மண்டை ஒடு கிடைத்தது. இங்கிலாந்தைக் கொடுமையுடன் ஆண்டு விட்டுச் சென்ற டென்மார்க்கு நாட்டினன் ஒருவனது மண்டை ஓடாகத் தான் அது இருக்கவேண்டும் என்று நம்பிய ஒருவன், அதை வெறுப்புடன் உதைத்துத் தள்ளப் போய், மற்றவர் மறுபுறம் இருந்துத் திரும்பி உதைக்க, இப்படியாக உதைத்தாடும் செயல் தொடர்ந்தது.

எதிரியின் மண்டை ஒட்டை உதைக்கும் வெறி, ஏராளமாக இருந்ததன் காரணமாக, மக்களிடையே