பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15
 

 எட்டாத உயரத்தில் இருக்கவேண்டும் என்று,பத்தடிஉயரம்' என்பதனையும் உறுதிப்படுத்தியிருந்தார்

இலக்கின் இடமும், உயரமும், நிறுவும் வகையும் முடிவெடுக்கபட்டிருந்தன. அதற்கான வகையில், பயன்பட இரண்டு பெட்டிகள் தேவைபட்டன.

டாக் டர் அவர்கள், ஒரு கட்டிட மேற்பார்வையாளர் ஒருவரிடம், பெட்டிகள் இரண்டினைக் கேட்டிருந்தார். அவரோ, கடைசி நிமிடம் வரை எதுவும் தராமல், இறுதியாக, பெட்டிகள் இல்லையென்று கூறிவிட்டு, பீச் பழங்கள் வைக்கின்ற கூடைகளைக் கொண்டுவந்து தந்தார்.

பெட்டிகள் இல்லாத நிலையில், பழக் கூடையாவது (Basket) கிடைத்ததே என்ற திருப்தியில், பெட்டிகளைப் பொருத்த வேண்டிய இடங்களில், பழக் கூடைகளைப் பொருத்திவிட்டார் டாக்டர்.

கூடைகளில்தான் பந்தினை எரிந்து போட வேண்டும். கூடைக்குள்ளே பந்து ஆட்டத்தின் தலையாய நோக்கமாகவும் அன்று இருந்தது.

கூடைகளே ஆட்டத்தின் குறிக்கோளாகஅமைந்துவிட்டதால், இதனைக் கூடைப் பந்தாட்டம் ( Basket Ball) என்றே அழைத்தனர்.