பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I Ꮾ கூடைக்குள் பந்து விழுந்துவிட்டால், பத்தடி உயரத்தில் இருக்கும் பந்தை எடுக்க, உயரமான ஏணி ஒன்று தேவைப்பட்டது. அடிக்கடி ஏணியா னது பந்தெடுப்பதற்காக, ஆட்டத்திற்குள் தேவைப் படவே, கூடையின் அடிப்பாகத்தைத் திறந்துவிட வேண்டும் என்று அகற்றினர். அடிப்பாகம் திறக் கப்பட்ட கூடையுள் பந்து விழுந்ததும், பந்து தானகவே கீழ்ப்புறமாக வரத் தொடங்கியது. அடிக்கடி பந்து விழுந்து விழுந்து, கூடைகள் விரைவில் சேதமாகிப்போகவே, அந்த அளவுக்குத் திறம் வாய்ந்த ஒரு இலக்கு அமைப்பு தேவைப்பட் டது. ஆகவே, இரும்பு வளையம் ஒன்றை அந்த இடத்தில் இலக்காகப் பொருத்தினர். இரும்பு வளையமே இப்பொழுது இலக்காக இருந்தபோதிலும், அக்காலத்தில் இட்ட பெயரா லேயே, கூடைப்பந்தாட்டம் என்று, இன்றும் அழைக்கப்படுகிறது. 4. வாலிபால் கைப்பந்தாட்டம் என்று நாம் அழைத்து மகிழ்ந் தாடும் இந்த ஆட்டத்தைத் கண்டு பிடித்துத் தொடங்கிவைத்தவர் வில்லியம் ஜி. மோர்கன்