பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 8 அந்தக் குழப்பத்தைத் தவிர்த்து, கூடைப் பந்தாட்டத்தின் பந்திலே உள்ள காற்றடைக்கும் ரப்பர் பையை (Blader) மட்டும் தனியே பயன் படுத்தி, விளையாட்டுக்கு உதவ வைத்தார். டென்னிஸ் ஆட்டத்திற்குப் பயன்படும் வலையினை எடுத்துக்கொண்டார். ஆக, பந்தும் வலையும்,பந்தினை ஆட கைகளும் தயாராகி விட்டி ருந்தன. இத்தகைய ஆட்டத்திற்கு அவர் இட்ட பெயர் மின்ட்டானெட் (Mintonnette). மின்டன் என்ற ஆட்டத்தின் தழுவல் என்பதால், இதற்கு இவ்வாறு பெயரினைச் சூட்டினர். எதிர்பார்த்த அளவுக்கு, மக்களிடையே உற் சாகம் பிறக்கவில்லை. ஆட்டத்திற்கு அமோகமான ஆதரவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் டாக்டர் ஹால்ஸ்டெட் (Dr. Halstead) என்பவர், இந்த ஆட்டத்தின் மகிமையை நன்கு உணர்ந்தார். அமெரிக்காவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டு கல்லூரி யிலே பணியாற்றிய இவர், ஆட்டத்தின் அடிப்படை நுணுக்கத்தை நுணுகி ஆராய்ந்தார். இருபுறமும் நிற்கும் ஆட்டக்காரர்கள், வலைக்கு மேலேயே பந்தை மாறி மாறி அடித்தாடிக் கொண்டிருப்பது தான் ஆட்டம் என்பதையும் உணர்ந்தார். அதல்ை அவர் (volley Ball) என்ற புதிய பெயரைச் சூட்டினர். volley என்ற ஆங்கிலச்