பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


பந்தை அடித்த அவர் இல்லாத பொழுது, குழியில் பந்து விழுமாறு அல்லது படுமாறு உருட்டிவிட்டால் அந்த ஆட்டக்காரர் ஆட்டமிழந்துவிடுவார். முதலில் அப்படித்தான் ஆட்டம் இருந்தது. பந்தாடு வோர் நின்று ஆடும் இடமாகவும், அவரை ஆட்டமிழக்கச் செய்கின்ற (out) வாய்ப்பினை அளிக்கவும், அந்தக் குழி பயன்பட்டது.

அடிபட்டுப் போகின்ற பந்தானது, அதிக தூரத்திற்குப் போய்விட்டால், அங்கிருந்து பார்க் கும் போது குழி தெரியாமல் போனதால், தடுத் தாடும் ஆட்டக்காரர்களுக்கு (Fieldsman) அந்தக் குழி இருப்பது தெரிவதற்கு அடையாளமாக,ஒரு கம்பினே (Sumps) ஊன்றி வைத்துக்கொண்டு ஆடினர்கள். ஆகவே, குழி இருந்த இடத்தில் கம்பு ஒன்று ஊன்றி, அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

அந்தக் கம்பு ஒன்றின்மீது பந்து பட்டால், பந் தடித்து ஆடுபவர் ஆட்டமிழந்துவிடுவார். முன் போலவே, அதிக தூரம் பந்து போய், அங்கிருந்து, குறிபார்த்து ஒற்றைக் கம்பை அடித்து வீழ்த்த இயலவில்லை என்ற குறை இருந்து தொடர்ந்தது.

அதனால்1700ஆம் ஆண்டு, ஒற்றைக் கம்புடன் துணையாக இன்னென்றை இணைத்து, இரண்டு கம்பு களாக்கிக் கொண்டார்கள். ஆக அந்த 1 அடி உயர முள்ள இரண்டு கம்புகளும் 2 அடி அகலத்தில் இருப்