பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மூலமாக எடுத்துக் காட்டுகின்ருர்கள் சரித்திர ஆசிரியர்கள்.

இலத்தின் மொழியிலே டெனிலிலுரடியம் (Tenililudium) என்ற சொல்லுக்கு டென்னிஸ் விளை பாட்டு’ என்பது பொருளாகும். ஆகவே, இந்த டென்னிஸ் என்ற சொல்லானது இலத்தின் மொழி யில் இருந்துதான் வந்திருக்கிறது என்கிருர் ஒரு ஆராய்ச்சி வல்லுநர்.

கிரேக்க மொழியில் உள்ள பீனிஸ் (Phennis) என்றவோர் சொல்லை அடிப்படையாகக் கொண்டு, கிரேக்க மொழி வழியாக இந்த ஆட்டம் டென்னிஸ் என்ற பெயரினைப் பெற்றிருக்கலாம் என்ற தொரு குறிப்பினைக் குறித்துக் காட்டுவோரும் உண்டு.

ஜெர்மன் மொழியிலே டேன்ஸ் (Tanz) என்ற ஒரு சொல் உண்டு. இந்த டேன்ஸ் என்ற சொல் லுக்கு பந்துத் துள்ளிக் குதித்து இயங்குதல் என்பது பொருளாகும். ஆகவே, இந்த சொல்லிலிருந்துதான் டென்னிஸ் என்ற சொல் உருவாகி, வந்திருக்கலாம் என்று வாதிடுவாரும் உண்டு.

பிரெஞ்சு மொழியிலே உள்ள டென்-எஸ் (Ten-ez) வார்த்தைக்கு விளையாடு’ என்பது பொருளாகும். 'கோல்ப் என்ற ஒரு ஆட்டத்தை, ஆரம்ப காலத்தில் ஆடியவர்கள், அந்த ஆட்டத் தைத் தொடங்குவதற்குமுன், ஆட்டத்தைத்