பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


தொடங்கு' என்பதற்காக Ten-ezஎன்று கூறினர் கள். அதாவது ஆடத்தொடங்குங்கள்' (Play away) என்று இந்த டென்-எஸ் என்ற சொல்லிலிருந்தே, டென்னிஸ் ஆட்டத்திற்கான சொல் வந்திருக்கலாம் என்று அபிப்பிராயப் படுவோரும் உண்டு.

பிரான்சு நாட்டில் 13ம் நூற்ருண்டில் ஆடப் பெற்று வந்த ஆட்டத்திற்குரிய பெயரானது 'ஜுடி பாம் (Jeu de Paume) என்பதாகும். "ஜூடி பாம் என்பதற்கு, உள்ளங்கையால் பந்தை அடித் நாடும் ஆட்டம்' என்பது பொருளாகும்.

உள்ளாடும் அரங்கங்களில் ஆடிய ஆட்டத்திற்கு ஜூடி கோர்ட்பாம் என்றும், நீண்ட நேரம் ஆடிய ஆட்டத்திற்கு ஜூடி லாங்பாம் (Jeu de long Paபme)என்றும் பெயர் அமாந்திருந்தது. இவ்வாறு உள்ளங்கையால் அடித்தாடும் பந்தாட்டத்தை, பிரெஞ்சு நாட்டினர் ஐரிஷ் நாட்டில் ஆடப்பட்டு வந்த கையடிப்பந்து(Hand ball) என்னும் ஆட்டத்திலிருந்து பெற்றனர் என்பதன. லேயே, மேற்கூறிய பெயரால் பிரெஞ்சு மக்கள் அழைத் தாடினர் என்றும் சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். ஒரு நூற்ருண்டு காலம் பிரெஞ்சு நாட்டில் ஆடப்பெற்ற இந்த ஆட்டம், (1827-1377) இங் லொந்து நாட்டை நோக்கிப் பயணத்தைத் தொடங் கியது. அப்பொழுது இங்கிலாந்தை ஆண்ட மூன்ரும்