பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


களாலும், பறவைகளின் இறகுகளாலும் ஆக்கப் பட்டிருந்தது. அதனை மரமட்டையால் (Bat) அடித் மகிழ்ந்தனர். அந்த நாட்களில் இந்த ஆட்டத் (Battled Doer) இன்னுெரு பெயராகும்.

இந்தியாவில் ஆடி மகிழ்ந்து வந்த ஆங்கிலேய அதிகாரிகள், தங்களது தாயகம் நோக்கிச் சென்ற போது, இந்த ஆட்டத்தையும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர். இந்த ஆட்டம் இங்கி வந்துக்குப் பயணமான காலம் 1871 அல்லது 1872ம் ஆண்டாக இருக்கலாம்.

1860ம் ஆண்டிலிருந்து, ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள், இங்கு தங்களுக் கேற்றவாறு விதிகளை அமைத்துக் கொண்டு தான் ஆடினர்கள். இங்கி லாந்துக்குச் சென்றதும், இந்த ஆட்டத்தை அவர்கள் தங்களது நண்பர்களுக்கும் ஆ டி க் கா ட் ட விரும்பினர்.

1873ம் ஆண்டு ஒரு நாள், இங்கிலாந்தில் கிளவ் செஸ்டர் என்னும் இடத்திற்கருகாமையில் உள்ள (Badminton) என்ற எஸ்டேட் பகுதியில், விருந்து ஒன்று நடந்தது. இந்த எஸ்டேட் டிற்கு உரிமையாளர் பியூபோர்ட் பிரபு என்பவர். அவர் அளித்த விருந்தின் போது, இராணுவ அதிகாரிகள் இந்த ஆட்டத்தினை ஆடிக்காட்டி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அனை