பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


வரும் இந்த ஆட்டத்தை மிகவும் ரசித்து மகிழ்! தனர். மனப்பூர்வமாகவும் ஏற்றுக் கொண்டனர்

அப்பொழுது, இந்த இந்திய ஆட்டமான 'பூன விற்கு உரிய பேர் அங்கு எழவே இல்லை. யாரைச் கேட்டாலும், அந்தப் புதிய ஆட்டம், பேட்மின்ட் டன் என்ற இடத்தில் ஆடிய ஆட்டம்' என்றே கூறினர்கள். பூன என்று யாரும் கூறவே இல்லை. பேட்மின்ட்டன் இடத்தில் ஆடிய ஆட்டம் என்றே எல்லோரிடையேயும் வழங்கப் பெற்றது.

முதன் முதலாக பேட்மின்டன் என்ற இடத்தில் ஆடப்பெற்றதால், அதையே பலரும் கூறிவந்த தால், பேட்மின்டன் என்ற பெயரே அதற்கு வந்துவிட்டது. பூவுைம், பேட்டில்டு டூயர் எனும் பெயரும் வழக் கொழிந்து பின் தங்கிப் போயின.

இவ்வாறு முதலில் ஆடப்பட்ட இடத்தின் பெயரே ஆட்டத்திற்குரிய பெயராக வந்த விட்டது. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

11. பிலியர்ட்ஸ் (Billiards)

இத்தாலி, இங்கிலாந்து, பிரான்சு, எகிப்து, ஸ்பெயின், அயர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள், பிலியர்ட்ஸ் என்ற ஆட்டம் எங்கள் நாட்டி