பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



44


டச்சு நாட்டினர் ஆடிய ஆட்டத்தின், பெயர் கெட்கோல்வன் (Ket Kolven) அல்லது கோல்வன் என்பதாகும். வளைகோல் பந்தாட்டத்தில் பயன் படும் வளைகோல் போலவே, இந்த ஆட்டத்திலும் ஆடும் தடி (Club) பயன்பட்டிருக்கிறது.

சோலி (Chole) என்ற பிளமிஷ் ஆட்டத்தினை நாட்டுப்புற மக்கள் ஆர்வமுடன் ஆடியிருக்கின்ற னர். அவர்கள் ஆடிய சோலி ஆட்டத்தில், மரக் கொட்டாப்புளி போன்ற மேலட் (Mallet) என்ற சாதனம்தான் அடித்தாடும் தடியாகப் பயன்பட் டிருக்கிறது.

இந்த ஆட்டம் கி. பி. 15ஆம் நூற்ருண்டு காலத்தில், ஸ்காட்லாந்தில்தான் மிகவும் பிரபல மாக விளங்கியிருக்கிறது. இந்த ஆட்டத்தை ஸ்காட் லாந்து மக்கள் மன்றமே சட்டம் போட்டு தடை செய்திருக்கிறது என்ருல், இங்குள்ள மக்களின் அள விடற்கரிய ஆர்வம்தானே காரணம்.

கோல்ப் (Gobe) என்ற ஜெர்மானியச் சொல் லுக்கு தடி, (Club) என்பது அர்த்தமாகும். இந்த கோல்ப் என்ற சொல், ஆங்கிலத்தில் கோல்ஃபாக (Golf) மாறியிருக்கிறது என்றே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

தடியும் வளைந்த குச்சியும், மரக்கொட்டாட் புளியும் போன்ற சாதனங்களே ஆரம்ப காலத்தில் ஆடப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அவை தற்போது மாறி, மென்மை மிகுந்த சீரான கம்பினுல்