பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


இந்தியாவில் இருந்துதான் இந்த ஆட்டம் தோன்றியிருக்க வேண்டும் என்று ஏறத்தாழ எல்லா ச ரி த் தி ர ஆசிரியர்களாலும் நம்பப்படுகிறது. இந்தியாவில் கி. பி. ஆரும் நூற்ருண்டில், இதனை 'சதுரங்கம்’ (Chaturangam) என்று அழைத்து ஆடி யிருக்கின்றனர்.

சதுர் என்ருல் நான்கு என்றும், அங்கம் என்ருல் படைப் பிரிவு என்றும் குறிக்கும். ஒரு அரசனுடைய படையில் மிக முக்கியமான நான்கு பிரிவுகளை ரத கஜ துரக பதாதிகள் என்று குறிப்பிடுவர். அதாவது தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்பதே அப்பிரிவுகளாகும்.

மேற்கூறிய நான்கு படைகளும் மிகுந்த ராஜ விசுவாசத்துடனும் நாணயம் நிறைந்த நம்பிக்கை யுடனும் தங்களது ராணியைம் ராஜாவையும் காக்கும் பொருட்டு, தங்களது உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல், தியாகம் செய்து காக் கின்ற உண்மை அமைப்பினைக் கொண்டு இந்த ஆட்டம் அமைந்ததைத்தான் சதுரங்கம் என்று குறித்தனர் போலும்.

அந்த அமைப்பே இப்பொழுது சிப்பாய்-(பான் Pawn) என்றும், குதிரை-(நைட் Knight) என்றும், யானை-(ரூக் Rook) என்றும், தேர்-(பிஷப் Bishob) என்றும் ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படு கின்றன. எதிரியின் முன்னேற்றத்தைத் தடை