பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


செய்து ஆடுவதால்தான் இதனை ஆங்கிலத்தில் செக் (cheek) என்று பெயரிட்டும் அழைத்தனர்.

இந்தியப்பெயரான சதுரங்கத்தை பாரசீகர்கள் கற்றுக் கொண்டு, சத்ரங் (chatrang) என்று உச்சரித் தனர். பாரசீகர்களிடமிருந்து படித்துக் கொண்ட அரேபியர்கள் இதனை ஷட்ரன்ஞ் (Shatrani) என்று அழைத்தனர். 14. பல்லாங்குழி


உலகமெங்கணும் பல பெயர்களால் அழைக் கப்பட்டு, ஆடப்பட்டு வருகின்ற இந்த ஆட்டம், தமிழகத்தில் பல பெயர்களாலும் அழைக்கப்பட்டு வருகின்றன, வந்திருக்கின்றன.

ஆடப் பெறுகின்ற காரியத்தைக் குறிக்க வந் தாலும், அத்தனைப் பெயர்களும் காரணப் பெயர் களாகவே அமைந்திருக்கின்றன என்பது தான், இதிலே நாம் காண வேண்டிய அதிசய ஒற்றுமை யாகும்.

பல்லாங்குழி என்பது போலவே, பண்ணுங்குழி, பன்னங்குழி, பள்ளாங்குழி, பதினங்குழி, பரல் ஆடும் குழி என்னும் பெயர்கள் பரவலாக விரவி வந்திருக் கின்ரன.