பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

விளையாட்டுக்களின் தோற்றத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விழையும்போது, வரலாற்றுக்கு முற்பட்டவை, வரலாற்றுக் குறிப்புகளுக்கு உட்பட்டவை என்று இரு பிரிவாகப் பிரிந்து நிற்பதை விளக்கமுற காணலாம். அந்த விளக்கத்தின் வழியே எத்தனையோ வகைகளையும் காணலாம்.

மனித இனம் மறுமலர்ச்சியுற்ற நாளிலிருந்தே உடல் இயக்கமாக, இனிய செயலூக்கமாகத் தோன்றி மலர்ந்த விளையாட்டுக்கள் சில உண்டு. நம் மூதாதையர்கள் ஒய்வு நாளில் அரும்பாகத் தொடங்கி, குறும்பாக வளர்ந்து, கரும்பாக நெடிதோங்கி, முதிர்ந்து நிலைபெற்ற விளையாட்டுக்களில் கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம் ஒரு வகை.

‘கண்டு பிடித்தே ஆகவேண்டும் புதிய விளையாட்டுக்களை’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு, கற்பனைத் தேரேறிப் பறந்து உடற்கல்வியாளர்கள் உழைத்ததன் மூலம், கண்டெடுத்துத் தந்த முத்தான விளையாட்டுக்களாம் கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள் மற்றொரு வகை.

மக்கள் மத்தியிலே பிரபலமாகியிருந்த விளையாட்டுக்களிலிருந்து கருவாகி, உருவாகி வந்து, பிறகு தனித்தன்மை பெற்று விளங்கும் தளப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், பிலியர்ட்ஸ், கேரம், ரக்பி போன்ற விளையாட்டுக்கள் இன்னொரு வகை.

பிறந்த இடத்தில் ஒரு பெயரும், புகுந்த இடத்தில் மற்றொரு பெயருமாகக் கொண்டு, புதிய விதிகளைப் பெற்று