பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. போலோ (Polo)



கி. மு. 4000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பாரசீகத்தில் போலோ என்னும் குதிரைப் பந் தாட்டம் ஆடப்பெற்று வந்தது என்றும், அவர் களிடமிருந்து சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின் இந்தோசீனப் பகுதியில் வசிக்கும் அசாமியர்கள் கற்றுக் கொண்டார்கள் என்றும் சில குறிப்புக்கள் கூறினலும், அவற்றிற்கான சான்றுகள் சரியாக அமையவில்லை. ஆகவே அவை குறிப்புக்களாகவே இருக்கின்றன.

இங்கிலாந்தில் தான் போலோ ஆட்டம் தொடங்கியிருக்கலாம் என்றும், அதற்காக பிரிட்டிஷ் நாட்டு தொல் பொருட் காட்சிசாலையில் இருக்கும் சில சித்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஹெர்பர்ட் என்பவர் கூறுகிருர் என்ரு லும், அதற்கான ஆதாரங்களை அவரால் முற்றிலும் தெளிவாகக்கூற முடியவில்லை.

இந்தியாவிலிருந்துதான் இந்தப் போலோ ஆட்டம் பிறந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் உண்டு என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த நிகழ்ச்சியானது போலோ ஆட்டம் தோன்று வதற்கும், போலோ என்ற பெயர் அமைவதற்கும் காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது.