பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. தளப்பந்தாட்டம் (Base Ball)



அமெரிக்காவில் விளையாட்டுப் பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஏ.ஜி. ஸ்பேல் டிங் என்பவர் சிறந்த தளப்பந்து ஆட்டக்காரர்.அவர், இந்தத் தளப்பந்தாட்டம் அமெரிக்காவில் தான் தோன்றியது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக இருந்தார்.

ஆனல், அவர் காலத்தியவராக வாழ்ந்த ாட்விக் (Chad Wick) என்பவர்,சிறந்த எழுத்தாளர் என்பதுடன், தளப்பந்தாட்டம் பற்றியும் நிறைய எழுதியிருப்பவர். அவர் தளப்பந்தாட்டம் பற்றிக் கொண்டிருந்த கருத்தினையும் நாம் இனி காண்போம்.

இவர் இங்கிலாந்தில் இருந்தபோது, தனது பள்ளி நாட்களில், பள்ளிக்கூடம் விட்டபிறகு பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள பரந்த மைதானத் விற்குத் தமது நண்பர்களுடன் சென்று, பந்தாட் டத்தில் கலந்து கொள்வார். அவர்களுக்குத் தேவையான ஆடுகளத்தினை அமைப்பது மிகவும் எளிதாக இருந்தது.

நான்கு பக்கமும் நான்கு கற்கள் அல்லது நான்கு முளைக்கம்புகளை நட்டு வைத்து, அடையாள ாகக் கொண்டு, பந்தை அடித்தாடுபவர் (Batter)