பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


நின்ருட என்பதற்காக, ஒரு சிறு குழியினைப் பறித்து வைத்து ஆட்டத்தைத் தொடங்கி விடுவார்களாம்.

இவர்கள் ஆடிய ஆட்டம், ஒல்டு ரவுண்டர்ஸ் (Old Rounders) என்ற ஆட்டத்திலிருந்து டவுன்பால் (Town Ball) என்று மாறி, அமெரிக்காவில் உள்ளநியூ இங்கிலாந்து பகுதிக்கு வந்தது என்றும் கூறுவர்.

பகுதியில் மசாசியூ செட்ஸ் ஆட்டம், என்றும், நியூயார்க் பகுதியில் நியூயார்க் கேம் (New York Game) என்றும் ஆடப்பட்டு வந்தத

ஒல்டு நிக்கர் பாக்கர் என்ற சங்கம் தான், இதற்குரிய விதிகளை செப்பனிட்டது என்றும், 5 தளங்கள் (Bases) இருந்ததை மாற்றி 4 தளங்கள் ஆக்கியதாகவும், அத்துடன் அமையாது, நீண்ட சதுரமாக இருந்த ஆடுகளத்தைத் திருத்தி கன சதுரமான வடிவில் (அதாவது வைரக்கல் போன்ற சதுர அமைப்பு) அமைத்ததாகவும் குறிப்புக்கள் கூறுகின்றன.

டவுன் பால் என்ற ஆட்டத்திலும் முதலில் நீண்ட சதுரவடிவமே ஆடுகள அமைப்பாக இருந் தது. ஒவ்வொரு மூலையிலும் முளைக்கம்புகள் ஊன்றி வைக்கப் பட்டிருந்தன. நியூயார்க் ஆட்டக்காரர்கள், நீண்ட சதுர மைதானத்தில் வேகமாக ஒட முடியாமலும், தளங்களில் கம்புகள் இருந்தபடியால்