பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56


ஆகவே, தளங்களே பிரதான இடத்தை வகிப் பதால் தான் இதனை தளப்பந்தாட்டம் என்றழைத் தனர். முதலில் கல் வைத்து அடையாளமிட்டு, பிறகு கம்பினை ஊன்றி, பிறகு இரும்புத் தகட்டினைப் பதித்து, மேலும் தளப்பைகள் போட்டு, பிறகு தரை யோடு தரையாகவே தளங்கள் அமைக்கப்பட்டு மெருகேறிய வடிவமே, ஆட்டத்தின் மேன்மைக்கு வழி கோலி தளப் பந்தாட்டமாகத் தோன்றி விட்டது.

17. மென் பந்தாட்டம் (Soft Ball)

1887ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஒரு நாள். பாரகட் படகுச் சங்கம் என்ற ஒரு அமைப்புக்கு (Farragut Boat Club) ஆண்டு விழா போன்ற நல்லநாள்.

இனிய விழாவாக எடுத்து நடத்திய நன்றி கூறும் அந்த நாளன்று, அதன் அங்கத்தினர்கள், உள்ளாடும் அரங்கம் ஒன்றில் கூடினர். கூடிய இளைஞர்களுக்குப் பொழுது போகவில்லை. ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடலாம் என்ருல் வேறு எதுவுமில்லை.

அக்காலத்தில் பிரபலமாக இருந்த தளப் பந்தாட்டத்தை (Base Ball) ஆடலாம் என்றாலும்,