பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60


தன்மையுடன் ஆட்டம் விளங்கியதால் தான், மென் பந்தாட்டம் என்ற பெயரைப் பெற்று பெருமை அடைந்தது. பாரெங்கும் பரவியது. கடமையில் செழித்தோங்கி விளங்கியது.

18. சடுகுடு ஆட்டம்

'சடுகுடு' என்று தமிழகத்திலும், பலிஞ் சப்பளம்' என்று ஆந்திராவிலும், குடுடுடு(ku-tu-tu) என்று மகாராஷ்டிரம், குஜராத், மற்றும் மத்திய பிரதேசப் பகுதிகளிலும் "குடுடூடூ' (Kudu-du-du) என்று வங்காளத்திலும் அழைக்கப் பெற்று ஆடப் படுகின்ற ஆட்ட அமைப்பினை, இன்று 'கபாடி’ எனும் பெயரில் அகில இந்தியா முழுவதுமாக ஆடி மகிழ்கின்றனர்.

குடுடூடூ எனும் மகாராஷ்டிரச் சொல்லுக்கு, ஒழுங்கற்ற முறையில் ஒலியெழுப்பும் கூட்டம் என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அதை மெய்பிப்பது போல, இன்றும் மகாராஷ்டிரப் பகுதிகளில், பாடிக்கொண்டு செல்வோர், சூ சூ' என்றும், ‘சர் சர்' என்றும், குடுடூடூடூ' என்றும் பாடி, ஆடுகின்றனர்.

இனி, சடு குடு என்ற சொல் வழக்கு எப்படி தமிழகத்தில் ஏற்பட்டது என்பதனை இனி ஆராய் வோம்.