பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

 வில் வித்தை, குதிரையேற்றம், வேலெறிதல், குத்துச் சண்டை, மல்யுத்தம், தட்டெறிதல், ஒடுதல் தாண்டுதல், கவண் கல் எறிதல் போன்ற அத்தனை போர்ச் செயல் முறைகள் எல்லாமே, காலப் போக்கில் மென்மையாகமாறி ஆட்டமாக வந்திருப் பதை நாம் அறிவோம்.

அவ்வாறே, போர்க் காலத்தில் நிகழ்ந்த இந்த முறை, வீரர்கள் தங்கள் திறமைகளைப் பெருக்கிக் கொள்ளும் வண்ணம், தங்கள் ஒய்வு நேரங்களில் பழகியதால், சடுகுடு தோன்றியும் இருக்கலாம்.

இக்கால மல்யுத்த வீரர்கள், சடுகுடு ஆட்டத்தைப் பெரிதும் விரும்பி ஆடுவதற்குக் காரணம், கால்களுக்கு நல்ல வலிமையையும், 'பிடி' போடுவ தற்கான முறையினை கைகளுக்கு நல்ல பயிற்சியளிக்கவும் பயன்படுவதால்தான்.

ஆகவே, அக்காலப் போர் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பெரிதும் விரும்பி ஈடுபட்டிருக்கலாம் என்றும் நாம் கொள்ளலாம் அல்லவா!

மேலும் சடுகுடு ஆட்டம் பற்றிய தோற்றத் தினை ஆராய்ந்த சிலர், தெளிவான கருத்தினைக் கூற முடியாவிட்டாலும், கிராமப்புறங்களில் இருந்தே இந்த ஆட்டம் தொடங்கியிருக்கலாம் என்று கூறு கின்ருர்கள்.

அத்தகைய ஆராய்ச்சி வல்லுநர்களின் உறுதி யான நம்பிக்கையினை மேற்கொண்டு, நான் எழுதி