பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது64


யிருக்கும் சடுகுடு தோற்றத்தினைப் பற்றி, விளையாட்டுக்களின் கதைகள் (பாகம் 1) என்ற நூலில் காணவும்.

19. ராக்கெட் (Racket)

ஆரம்ப காலத்தில், விளையாட்டில் விருப்ப முள்ளவர்கள், பந்தினைக் கையால் தள்ளியும், அடித்தும் குத்தியும், விளையாடி மகிழ்ந்தார்கள். அந்த நாட்களில், பந்தை அவ்வாறு அடித்தாடியது அவர்களுக்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது.விருப்பம்.அதிகம் இருந்ததால், எதையும் ஏற்றுக் கொள்கின்ற இதயமும் கூடவே இருந்தது.

போகப் போக, பந்திலே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பந்தினைக் குத்தி ஆடும்போது, கை வலிக்கத் தொடங்கியதை, ஆடியவர்கள் உணர்ந் தார்கள். அதாவது துண்டுத் துணிகளை ஒன்ருக உருட்டிச் சேர்த்து நூலினல் தைத்து, பந்தை உரு வாக்கியிருந்த காலம் அது. துணியால் செய்த பந்து கைகளை நோகச் செய்தது.