பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65

 அதன்பின், துணிகளுக்குப் பதிலாக உள்ளே பறவையின் இறகுகளை வைத்து, தோலால் ஆகிய துண்டுகளை சேர்த்துத் தைத்து பந்துகளை உருவாக்கி ஆடினர்கள். ஷேக்ஸ்பியர் தனது நூலில், தலைமுடியினை உள்ளே வைத்துத் தைத்து டென்னிஸ் பந்தினை உருவாக்கியதாக எழுதிய ஒரு குறிப்பும் உண்டு.

பந்து கனமாக இருக்கும்போது, கையால் அடிக்கவோ குத்தவோ செய்தால் வெறுங் கை வலிக்கத்தானே செய்யும்? ஆகவே, கையுறைகளை (Gloves) அணிந்து கொண்டு அடித்தாடத் தொடங்கினர். ஆரம்ப நாளில் அதுவும் சற்று ஆறுதலாக இருந்தது. என்றாலும், எதிர்பார்த்த அளவு ஆனந்த நிலையை அந்தக் கையுறைகளால் அளிக்க முடியவில்லை.

கையுறைகள் கை கொடுத்து விட்டன. ஆகவே,வேறு ஒரு புதிய துணியை பந்தை அடித்தாடுவதற்காகத் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விளையாட்டிலே விழுந்த நெஞ்சங்கள் ஒரு புதிய அமைப்பினைத் தேர்ந்தெடுத்தன. துடுப்பு போன்ற அமைப்புள்ள நீண்ட தலையமைப்பு கொண்ட பலகைகள் மற்றும் எழுது கோல் போன்ற அமைப்பினைக் கொண்ட நீண்ட மட்டைகளால் அடித்தாடத் தொடங்கினர்கள். வி.-5