பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 வெறும் புள்ளி விவரக் கணக்கிலே தராமல், எளிதிலே விளங்கவும் இதயத்திலே தங்கும் வண்ணமாகவும் இங்கு தந்திருக்கிறேன். விளையாட்டுத்துறை இன்று பள்ளிகளில் சிறப்பான இடத்தினைப் பெற்றிருக்கிறது. இன்றைய நாட்களில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேர்வுக்காக மட்டும் விளையாட்டினை அணுகாது, நிறைய செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இது போன்ற எனது நூல்கள் உதவும் என்று நம்புகிறேன். எனது பெரும் முயற்சிகளுக்கெல்லாம் பெரிதும் துணை யிருந்து, ஆதரவு தந்து வாழ்த்தி வரவேற்கும் குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற் கல்விக் கல்லுரி முதல்வர் டாக்டர் ராப்சன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூல் வெளிவர துணைபுரிந்த திரு. R. சாக்ரடீஸுக்கும் என் அன்பு நன்றி. விளையாட்டுத்துறை பற்றிய நூல்களில் இது, எனது 28வது நூலாகும். அன்பு காட்டி ஆதரிக்கும் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரி வித்துக் கொள்கிறேன். ஞானமலர் இல்லம் தி.நகர், சென்னை-1 ..) எஸ். நவராஜ் செல்லையா