பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20. ஒலிம்பிக் பந்தயம்

கிறிஸ்து பிறப்பதற்கு, பல நூற்ருண்டுகளுக்கு முன்னரே, கிரேக்க நாட்டில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து வந்தன. இத்தகைய ஒலிம்பிக் பந்தயங்கள் பற்றிய குறிப்புக்கள் அனைத்தும், கிரேக்க நாட்டுப் பெருங்கவிஞர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும் விளங்கிப் புகழ் பெற்ற அரிஸ்டா பேன்ஸ், அரிஸ்டாடில், அத்தினஸ், பிளேட்டோ, சாக்ரடீஸ், சீனபன், (Xenophen) மற்றும் பல ஆசிரியர்களின் நூல்களில் இருந்தே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கிரேக்க நாட்டு மக்கள் மட்டுமே பங்கு பெற்று விளையாடக்கூடிய போட்டிகள், கிரேக்க நாட்டிலேயே நடைபெறும்போது, கிரேக்க விளையாட்டுக்கள் என்று கூறாமல், ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஏன் அழைத்தார்கள் என்பதை அறியும் போதுதான், அவர்களின் அகமும் புறமும் நமக்கு நன்கு விளங்குகிறது.

கிரேக்க நாட்டிலே `ஒலிம்பியா' எனும் மலைப் பகுதி என்று ஒன்று இருந்தது. ஆல்பியஸ் என்ற ஆறும் கிலாடஸ் என்னும் ஆறும் இருபுறமும் ஜீவநதியாக ஒட, வடபுறம் மலேகளால் சூழப் பெற்றஅந்த ஒலிம்பியா பகுதி முழுவதும், புனிதம் நிறைந்த பகுதியாகவே கிரேக்க மக்களால் கருதப்பட்டது.