பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


72


துாது தோற்றுவிட்டது. துணைக்குப் படை வர வில்லை. என்ருலும் இதயத்தில் சோகத்தை சுமந்து கொண்டு வீரன் ஓடிவந்தான். வந்தவனுக்கு இங்கே இனிய சேதி காத்திருந்தது. உணர்ச்சி வெறி கொண்ட ஏதென்ஸ் வீரர்கள், பாரசீகத்துப் படையை விரட்டி அடித்து வெற்றி பெற்றிருந் தனர். கலங்கிப்போன பாரசீகத்தார், கப்பலேறி ஒடிப்போர்ைகள்.

ஏதென்ஸ் நகரத்து முக்கிய வீதிகளில் நின்று, காத்து நிற்கும் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த வெற்றிச் செய்தியைச் சொல்லவேண்டுமே! என்ன செய்வது? யாரை அனுப்புவது என்று யோசித்த படைத் தலைவன், சேதி சொல்லத் தெரிந் தெடுத்தது யாரைத் தெரியுமா? மீண்டும் இந்த பிடிப்பைட்ஸ் என்ற வீரனைத்தான் . ஒடி வந்த களைப்பும் இளைப்பும் உடலைத் தாக்கி யிருந்தாலும், பிடிப்பைட்ஸ் மறுக்கவில்லை. களைக் கவும் இல்லை. மகிழ்ச்சியுடன் இந்தப் பொறுப்பை மனமார ஏற்றுக்கொண்டான்.

இரண்டு பகலும் இரண்டு இரவும் என்று, காட்டிலும் மேட்டிலும், சேற்றிலும், சகதியிலும், பனியிலும் குளிரிலும் ஒடிணான் அவன். ஒடிக் கொண்டேயிருந்தான்.

இளைத்துக் களைத்த உடல். இரத்தத்தை இரைத்துக் களைத்த இதயம். சுவாசித்துச் சலித்த நுரையீரல், எதுவும் அவனை ஓடாமல் தடுக்க முடிய