பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



73


வில்லை. அவன் உற்சாகத்தையும் கெடுக்க முடிய வில்லை. ஏதென்ஸ் நகரத்தை நோக்கி ஒடினன். மாரதான் எனும் போர் நடந்த இடத்திற்கும், ஏதென்சுக்கும் இடையில் உள்ள தூரமோ 26 மைல் களுக்குமேல்.

ஓடிவந்தவன் கோட்டை வாயிலை எதிரே கண்டான். கூட்டமாகக் கூடியிருக்கும் தனது நாட்டு மக்களைக் கண்டான். மகிழ்ச்சியால் மனம் அலபாய்ந்தது. ஆர்வம் அவனை ஒடத் துாண்டியது. கால்கள் இனி ஒட முடியாது என்று பின்னிக் கொண்டன.

கண்கள் செருகிக் கொண்டன. வாய் உலர்ந்து போனது. நா உள்ளே இழுத்துக் கொண்டது.

தள்ளாடியபடியே ஒடிவந்தான். தலைவர்க ளருகில் சென்ருன். தளிர் ஒன்று புயலில் வளைந் தாடுவது போல நின்ருன். வென்றுவிட்டோம், மகிழ்ச்சிகொள்ளுங்கள் என்று சொன்னன். கீழே மயங்கி விழுந்தான்.

விழுந்தவன் மீண்டும் எழவே இல்லை. தியாகப் பிழம்பாய், தீரம்மிகுந்த மறவய்ை பிடிப்பைட்ஸ் அமரன் ஆன்ை. நாட்டின் மானம் காக்கப் போராடிய அந்த வீரன், ஒலிம்பிக் பந்தயங்களில் வென்ற பெரு வீரனும் ஆவான். அவன் மாரதான் என்ற இடத்தி