பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


லிருந்து ஏதென்சுக்கு ஓடிவந்த துரத்தினைக் கணக் கிட்டு, அது போன்றதொரு நெட்டோட்டப் போட்டியை வைக்குமாறு, பியரில் என்பவர் புதிய ஒலிம்பிக் பந்தயம் தொடங்கக் காரணமாக இருந்த பியரி கூபர்டின் பிரபு என்பவரிடம் கேட்டுக் கொண்டார்.

26 மைலும் 385 கெச துாரமும் உள்ள நெட் டோட்டப் போட்டியானது, பிடிப்பைட்ஸின் நினைவாக, மாரதான் ஒட்டம் என்ற பெயரோடு ஒலிம்பிக் பந்தயத்தில் இணைக்கப்பட்டது.

அமரனை வீரன் பிடிப்பைட்ஸ், அஞ்சாநெஞ்சி னுக்கும் தாயகப் பற்றுக்கும் ஒர் எடுத்துக் காட்டாக உலக மக்களிடையே திகழ்கிருன். இந்த ஒட்டத்தின் மூலம் அழியாப் புகழும் பெற்று, சிரஞ் சீவியாய் வாழ்கிருன் . [[rh 22. குத்துச் சண்டை மேடைக்கு 'ரிங்'[Ring] என்ற பெயர்]] கி. மு. 9ம் நூற்ருண்டில், கிரேக்கத்தை ஆண்ட தீசியஸ் என்ற மன்னன், தன் வீரர்களின் பொழுது போக்கிற்காகக், குத்துச் சண்டையைக் கண்டு பிடித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தான்.