பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

 Tug என்றால் வலிந்து இழுத்தல் என்பது பொருளாகும். போர்க் காலங்களில் வலிந்து இழுத்து வண்டியை நடத்திய இம்முறையை, பிறநாடுகளும் பெரிதும் விரும்பி பின்பற்றின.

போர் அமைப்பில், போரிடும் முறையில் புதிய புதிய யுக்திகளும் சக்திகளும் பெருகப் பெருக, பார வண்டியை இழுக்க வேண்டிய அவசியம் போர்வீரர் களுக்கு பிற்காலத்தில் இல்லாமற் போயிற்று.

பிறகு, இப்பயிற்சியானது இராணுவ வீரர்களுக்கு, பலப்பயிற்சி தருவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாக மாறி, விளையாட்டு விழாக்களில் கவர்ச்சி மிகுந்த ஒரு நிகழ்ச்சியாக இன்று மாறி வந்து விட்டது.

‘வடம்' இழுக்கும் போட்டி இன்று, உணர்வைக் கவரும் ஒப்பற்ற நிகழ்ச்சி என்றால் அது மிகையல்ல. உண்மைதான்.

24. வெற்றிக் கேடயம் (Trophy) வெற்றிக் கோப்பை(Cup)

'போர்க்களங்களில் பெற்ற வெற்றியைக் குறிக்கும் நினைவுச் சின்னம்’ என்பது தான் டிரோபி