பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

 ஒரு யோசனை பளிச்சிட்டது. அது தான் வெள்ளித் தகட்டினைப் பதிக்க வேண்டும் என்பது.

மரத்தில் பதித்த வெள்ளித் தகடுகள், சூரிய ஒளியிலே மின்னி மிளிர்ந்தது கண்டு வீரர்கள் மகிழ்ந்தனர்.

ஒலிம்பிக் பந்தயம் கி. மு. 776ம் ஆண்டு தொடங்கியதற்குப் பிறகு, வெற்றி வீரனுக்கு புனித ஆலிவ் மலர் வளையம் என்பது பரிசாகத் தரப் பட்டது. காலம் மாற மாற, வெறும் மலர் வளையம் மட்டும் விளையாட்டு வீரர்களை மகிழ்விக்கவில்லை.

எனவே, கிரேக்கத்தை ஆண்ட ரோமானியர்கள், அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரனுக்கு வெள்ளித் துண்டுகளைப் பரிசாகத் தந்தனர்.

வெள்ளித்துண்டு பரிசுகளுக்குப் பிறகு, ஒலிம்பிக் பந்தயமே காலத்தின் கோலத்தால் நிறுத்தப்பட்டது. பல நூற்றாண்டுகள் பந்தயமோ பரிசளிப்போ எதுவும் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புக்களில் இல்லை.

கி. பி. 1512ம் ஆண்டு, இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் நடந்தபோது, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மலர்கள் பொதிந்த மரப்பந்து ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. நாட்கள் ஆக ஆக, மரப் பந்து பரிசானது வெள்ளிப்பந்தாக மாறியது.