பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- __

அனைவரும் ஆட்டக்காரர்களே

உலகம் என்பது ஒரு ஆடுகளம். அதில் வாழும் ஆண் பெண் அனைவரும் ஆட்டக்காரர்களே. ஏதாவது ஒரு இடத்தில் நின்று எப்படியாவது விளையாடித் தான் தீர வேண்டும். விளையாடாமல் வேறு வழியேயில்லை இயற்கை அமைத்துத் தந் துள்ள விதிகளின்படியே காலம் எனும் பந்தை ஆடிச்சென்று இன்பம் எனும் இலக்குவை அடை வதே வாழ்க்கை ஆட்டத்தின் நோக்கமாகும் ஏனெனில்,விளையாட்டு என்பது ஆனந்த உலகத்தின் அற்புதத் துர்துவன் ஆகும். இணை ஏதும் இல்லாதது

விளையாட்டை விட சிறப்பான ஆன. தமளிக்கக் கூடிய வேறு ஒன்று உலகில் உண்டென்ருல், அது விளையாட்டுத்தான். வேறெதுவும் இல்லை.

சோதனைக் களம்

விளையாட்டு என்பது நல்லவன தீயவன என்று தன்னைத் தானே எடை போட்டுத் தெரிந்து கொள்ளச் செய்திட வாய்ப்பளிக்கும் ஒரு சிறந்த சோதனைக் களமாகும் .

நல்ல வழி காட்டி

விளையாட்டு என்பது நேர்மையான வாழ்வை வாழ்ந்திடச் செய்யும் வளமான வழி காட்டியாகும்

வி. சி-1