பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I () எஸ். நவராஜ்செல்லையா

விளையாட்டு மனதை மகிழ்விக்கிறது. உடலே அழகுபடுத்துகிறது. வலிமையையும் சக்தியையும் வற்ருத ஜீவநதி போல் வழங்குகிறது

சுகமான சுகம்

விளையாட்டைப் புரிந்து கொண்டு விளையாடத் தொடங்கி விட்டால், அது விளைக்கின்ற, சுகம் போல நீ எங்கு சென்ருலும் பெற முடியாது ஆடும் போதும் இன்பம் அதன் பிறகும் இன்பம் இன்பமே.

உல்லாசப் பயணம்

வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து எளிதாக விடுதலை பெறவிரும்புவோர், அதிலும் பொலிவோடு வெற்றி பெற விரும்புவோர், விளையாட்டை ரசிக்க வும், விளையாடவும் பழகிக் கொண்டால் போதும், ஒடுகின்ற ஆற்றில் உல்லாசப் படகுப் பயணம் போல அது அமைத்துத் தந்து விடும்.

ஒப்பற்ற உலகம்

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பது தான் உலக வழக்கு. விளையாட்டும் ஒர் உலகம் தான். அந்த ஒப்பற்ற உலகிலும் எது எப்படி எப்பொழுது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாததுதான்.

திறந் o L; த்த Jr. 11) |

விளையாட்டு என்பது ஒர் திறந்த புத்தகம். ஒப்பற்றக் கருவூலமான அந்தப் புத்தகத்தை விரும்பியவர்கள், விரும்பிய முறையில் படித்துப் பயன் பெறலாம். புத்தகத்தைத் தலையணையாக