பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளையாட்டுச் சிந்தனைகள் İ İ

வைத்து உறங்குபவர்கள் புத்திசாலி ஆக முடியா தல்லவா! Ђ

நாடும் வீடும்

விளையாட்டுக்களை வெறுத்து வீழ்த்தி விட்டு உலகிலே வாழ்ந்து விட்ட நாடுகளும் இல்லை. விளை யாட்டுக்களைப் பெருமைப்படுத்தி, வாழ்த்தி ஏற்றுக் கொண்டு வீழ்ந்து பட்ட நாடுகளும் உலகில் இல்லை. ஒன்று மட்டும் உண்மை. விளையாட்டுக்களில் தலை சிறந்த நாடுகள் தான் இன்று, உலக நாடுகளுக் கிடையே உன்னத இடத்தை வகிக்கின்றன.

துக்குத் துக்கி

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதவன் - செருப்பைக் காலில் அணியாமல் தலையில் தூக்கிக் செல்பவன் போலத்தான். எதை

யும் இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுத் தருவது தான் விளையாட்டாகும்.

சிறந்த ஆட்டக்காரன்

பார்வையாளர்களைக் கவர்ந்து கொண்டு, தன்

பக்கம் இழுத்துக் கொள்கிறவன் தான் சிறந்த ஆட்டக்காரன் ஆவான்.

சிறந்த திறன்களும் செயல் நுணுக்கங்களும் நிறைந்தவன் பெரிய விளையாட்டு வீரன் ஆகி விட முடியாது. விதிகளை நேர்மையாகப் பின்பற்றுகின்ற வனே பெரிய விளையாட்டு வீரன் ஆவான்.