பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளையாட்டுச் சிந்தனைகள் 1.3

பயிற்சியும் முயற்சியும்

பயிற்சியும் முயற்சியும் விளையாட்டிற்கு இரு கண்கள் போன்றவையாகும். ஒரு கண் முகத்திற்கு அழகு இல்லை. காட்சியும் சரியாக அமையாது. அது போலவே தான் பயிற்சில்லாத முயற்சியும், முயற்சியிலாத பயிற்சியும்.

உழைக்கத் தெரியாதவனுக்குப் பிழைப்பு வராது. சோம்பேறிக்கும் விளையாட்டு வராது. அதன் லட்சியமும் லாவகமும் புரியவே புரியாது.

விளையாட்டும் புகழும்

எல்லோரும் தான் விளையாடுகிருர்கள். ஆனல், ஆடுகின்ற எல்லோருமே புகழ் பெற்று விடுவதில்லே ஏன் தெரியுமா? அளவிலா உழைப்பில் தான் ஆற்றல் வளர்கிறது. தன்னைத் தான் முழுதாக ஈடு படுத்திக் கொள்பவர்களே தகுதியையும், அதற் குரிய புகழ் நிலையையும் பெற்று மகிழ்கின்ருர்கள்.

ஏமாற்றி வெற்றி பெற வேண்டும் என்று முயல்கின்றவன், நொண்டிக் கழுதை மீதேறிக் கொண்டு குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள் பவன் போல்தான். பிறர் பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும் என்று அவன் நினைத்துப் பார்த்தால் அது போல் செல்வானே?

விளையாட்டுக் கலை

விளையாட்டில் யாருமே முழுதும் கற்றவர்கள் இல்லை தேர்ச்சி நுணுக்கம் பெற்றவர்கள் இல்லை. கற்கக் கற்க மேலும் வளர்ந்து கொண்டே போகும்