பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14
விளையாட்டுச் சிந்தனைகள்
 


கலைதான் விளையாட்டுக்கலையாகும். போதும் என்று திருப்தியடைந்து விட்டால், பாதிக் கிணறு தாண்டி யவரின் கதைதான். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பசியும் வேகமும் உள்ளவர்கள்ே கலே நுணுக்கம் நிறைந்த ஆட்டக்காரர்களாக இருந்திட முடியும். கற்றது கை மண் என்பதும் விளையாட்டுக்குப் பொருந்துமே!

காட்டான்

கரையை அழித்துக் கொண்டு போகின்ற ஆற்றைக் காட்டாறு என்கிருேம். விதிகளை அழித்துக் கொண்டும், முறைகளைப் பழித்துக் கொண்டும் முறையில்லாது ஆடுகின்ற நிலையை காட்டாட்டம் என்கிருர்கள். அவ்வாறு ஆடுபவரை காட்டான் என்று கூறலாமல்லவா!

பாராட்டும் வெளிச்சமும்

உண்மையான ஆட்டக்காரரை உலகம் புரிந்து கொண்டு நிச்சயம் பாராட்டும். பாராட்டுப் பெற வேண்டும் என்பதற்காக, வெளிச்சம் போட்டுக் கொண்டு விளம்பரப் படுத்திக் கொண்டு அலேய வேண்டாம். அப்படி அலையவும் வெளிச்சம் போட வும் செலவழிக்கின்ற நேரத்தை, உண்மையாக உழைத்திடப் பயன்படுத்தினல், அதுவே உயர்வை

எட்டிய வரைக்கும் தான் கையால் தள்ளி

ஏற்றி விடமுடியும். அதற்குப் பிறகு, அவர் முயற்சி செய்தால் தான் மேலே மேலும் மரம் ஏறமுடியும்,