பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16
விளையாட்டுச் சிந்தனைகள்
 


விவரமாகக் கற்றுக் கொள்ளவும், வினயமாக செயலாற்றவும் கூடிய திறமைகளை வளர்த்துக் கொள்வதில்தான் முழுமூச்சாகக் கவனம் செலுத்த வேண்டும். திறமையும் வெற்றியும் ஓர் வயிற்றுக் குழந்தைகள்தான். *

பொருளுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே

விளையாட்டில் ஈடுபடக்கூடாது. துன்பமெனும் இரு ளகற்றும் இன்ப ஜோதியாகக் கொண்டால் அது தான் உண்மையான நிதியாகும். அப்படி எண்ணி ஈடுபடுபவரே அறிவுடையோராவார்.

வ ைெமயும் நிலைமையும்

வலிமையான உடலில் தான் வலிமை வாய்ந்த நெறிகாக்கும் மனம் அமைந்திருக்கும், நலிந்த உடலில் நலிந்த, பலவீனமான மனம் தான் இருக்கும். நலிந்த உடலோ மனதையும் நலிய வைத்து, அதன் அடிமையாகி விடுகின்றது. வலிமை யான உடலோ, மனதை உற்சாகப்படுத்திவிடு வதுடன், அதனைக் கட்டுப்படுத்தித் தன் ஏவலகை மாற்றிக் கொண்டு வெற்றி பெறுகிறது.

வலிமையானவர்களுக்குத் தான் இந்த உலகம் பயப்படும் என்பார்கள். விளையாட்டுலகிலும் அப்ப டித்தான் எதிர்த்தாடுபவர்கள். பயப்படுவார்கள். இனிதாக ரசிக்கும் பார்வையாளர்களும் வயப்படு வார்கள்.வலிமைக்குப் பரிசு வேறென்ன வேண்டும்?

பண்பாடு

அவரவர் வீட்டில் அவரவர் இருக்கும் பொழுது அரசனைப் போல அதிகாரம் உடையவர்