பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

விளையாட்டுச் சிந்தனைகள்


சவடால் அடிப்பதைக் கேட்கும்பொழுது, படபடத் துக் கூச்சல் போடும் பறவைகள் தான் நம்நினைவுக்கு வருகின்றன. ஆயிரம் பறவைகள் வரும் போகும். ஆனல், மரம் அப்படி அல்ல. பறவை வந்தாலும் வராவிட்டாலும் மரம் வாழும். கேட்க வேடிக் கையாக இல்லை!

தாமரையும் புகழும்

தடாகத்தில் தண்ணிர் உயர உயரத்தான் தாமரையும் உயரும். காட்சிக்கு அழகாகவும் செழு மையாகவும் தோன்றும். அது போலவே, விளையாட் டுத்துறை என்ற தடாகத்தில், கட்டுப்பாடு என்று நியதி தண்ணிராக உயர உயரத்தான், விளையாட்டு வீரர்களின் பெருமையும் புகழும் ஒங்கும் .

தண்ணிரை விட்டு விட்டுத் தாமரை உயர்ந்து விட முடியாது. தண்ணிர் போனல் தாமரையும் போனது தான். அதுபோலவே, கட்டுப்பாட்டையும் கடமையுணர்வினையும் கழித்து விட்டு எந்த விளையாட்டு வீரரும் வீராங்கனையும் வாழ்வில் உயர்ந்து விட முடியாது.

ஏமாற்றம்

ஏமாற்றம் என்பது அறிவுக்குத் தாதி போன்றது என்று அறிஞர்கள் கூறுவார்கள். அது போலவே தோல்வியடையும் பொழுது தான், தான் ஆடிய ஆட்டத்தைப் பற்றிய ஞாைேதயம் பிறந்து விடுகிறது. அந்த ஞானே தயம் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பினையும் அளித்து விடுகிறது.