பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20
விளையாட்டுச் சிந்தனைகள்
 


விரும்பி வருவோருக்கு ஏற்றவாறு தான் விளையாட் டுக்களும் இன்பத்தைக் கொடுக்கின்றன. மகிழ்விக் கின்றன.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பது யோகியர்க்கான தத்துவம். இது தவநிலைக்கு ஈடு படுத்தும் மனேநிலையை மலரச் செய்ய வைக்கின்ற தாரக மந்திரங்களாகும். அந்த இனிய மந்திரங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் மிகமிகப் பொருத்த மானதாகும்.

விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற நேரத்தில் வீரர்களை, வீராங்கனைகளை விறுவிறுப் புடனும் சுறுசுறுப்புடனும் விளையாடச் செய்ய எவ்வளவு அழகான அறிவுரையாக விளங்குகின்றன! விளையாடுவதற்கு முன், அதிகமாக உண்டு களைத்து விடாமல்-மிதமாக உண்டு பசித்திருப்பதும், பேசிப் பேசி சக்தியை வீணுக்காமல் தனித்திருப்பதும், துாங்கி அயர்ந்து போனல் துரிதமாக இயங்க முடியாது என்பதால் விழித்திருப்பதும் என்பதும் சிறப்பாக விளையாட அல்லவா உதவுகிறது.

பண்பாளரும் சண்டாளரும்

தவறு செய்வது மனித இயற்கை. அதையே தெரிந்து கொண்டு, திரும்பத் திரும்பச் செய்வது சைத்தானின் குணம். தவறுகளைத் தவிர்த்து விடு வதும், ஒதுக்கியும் ஒதுங்கியும் வாழ்வதும் பண் பாளரின் குணமாகும்.

தவறுகள் செய்ய வாய்ப்பளித்து, அவற்றை செய்யாமல் தவிர்த்து விடும் வாய்ப்புக்களையும்