பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் 2 3

மிகுதியாக அளித்து, பண்பாளர்களாக ஆட்டக் காரர்கள் விளையாட்டுக்கள் உருவாக்கி விடுகின் றன. தவறுகளைத் தவிர்த்து விடமுயன்று நல்லதைச் செய்பவர்கள் பண்பாளர்கள் ஆகின்ருர்கள். தவறு களையே தொடர்ந்து செய்ய விரும்பி, செய்பவர்கள் சண்டாளர்கள் ஆகின்ருர்கள். ஆற்றுக்குப்போய் சேற்றைப் பூசிக் கொள்வோர் எப்படி?

தோல்விப்படி

தோல்வியடைவது இயல்புதான். போட்டியில் தோல்வியுற்றவர்கள் தங்களது தோல்வியை முதலில் ஒத்துக்கொள்ளவேண்டும். மறந்தும் மற்ற வர்கள் மேல் பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது. தன் தோல்விக்கான காரணங்களை சாவகாசமாக அமர்ந்து ஆராய வேண்டும். முடிந்தவரை அவற்றைத் தவிர்த்துவிட முயற்சியும் பயிற்சியும் செய்யவேண்டும். இதனை விட்டு விட்டு, தோற்கும் போதெல்லாம் காரணம் கூற முயற்சித்தாலும், பிறர் மீது பழியைய் போட் டாலும், பாதிக்கப்படுவது நாம் தானே தவிர, பிறர் அல்ல. தோல்வியை வெறுக்கிறவர்கள் வெற்றியை எட்ட மாட்டார்கள். முதல்படியிலேயே மண்டி போட்டு உட்கார்ந்து விட்டால், மாடியை அடையமுடியுமா என்ன?

நீரும் சேரும்

அனுபவங்கள்தான் ஒருவரை அறிவாளியாக்கு

கின்றன. அறிவுள்ளவர்கள் அனுபவங்களை அன்பு

டன் ஏற்றுக்கொள்கின்றனர். பண்புடின் தேர்ந்து