பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22
விளையாட்டுச் சிந்தனைகள்
 


அவற்றிற்கேற்றவாறு நடந்து கொண்டு அறிவை விருத்திசெய்து கொண்டு, வாழ்வையும் சுகப்படுத் திக் கொள்கின்றனர்.

முட்டாள்கள் அனுபவங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நீரிருக்கும் போது சேற்றில் சென்று படுத்துப் புரளும் எருமை போல, அவர் களது மனம் அறியாமையிலிருந்து விடுபடமாட் டேன் என்கிறது. விளையாட்டுக்களிலும் இப்படி ஆட்கள் இருக்கத்தான் இருக்கின்றனர்.

விழுவதும் எழுவதும்

குறுக்கு வழியில் புகழ் பெறுகின்றவர்கள் சில சமயங்களில் எளிதாகவே ஆனந்தப்படுகின்ருர்கள். அந்த ஆனந்த நிலையினை அனுபவித்து வருவதற்குள் அவர்கள் பொய்ப்புகழ் இடிந்து விழுந்து விடுகிறது. ஒருமுறை அவர்கள் கீழே விழுந்துவிட்டால், மீண்டும் எழவே முடியாமல் திண்டாடுகின்ருர்கள். விளையாட்டுலகில் குறுக்கு வழியில் முன்னுக்கு வந்த வர்கள், வந்த வேகத்தில் போன கதை நிறைய இருக்கின்றன.

விழுந்தவர்கள் கதையைப் படித்துவிட்டு, விழா மல் வாழ முயல்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

பக்தியும் பயனும்

கடவுளிடம் உண்மையாகவே பயந்து நடந்து கொண்டால், மனிதர்களிடம் ஒருவன் பயப்பட

வேண்டிய அவசியமே இல்லை. அதுபோலவே, விதி களில் நம்பிக்கையும் பற்றும் கொண்டு, விளை