பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

விளையாட்டுச் சிந்தனைகள்


  • .

அழுகிய ஆப்பிள்

விளையாடும் பொழுது கெட்டிக்காரராக ஆடினல் பெருமையும் புகழும் கிடைக்கும். அவரே வெளியுலகில் தாறுமாருக நடந்து கொண்டால், விளையாடுகிற அவருக்கும் தலை குனிவு விளையாட்டுத் துறைக்கும் பெரும் அவமானம். ஆகவே, ஆடுகளத் திற்கு வெளியேயும் உள்ளேயும் பண்பாளராக (GENTLE MAN) ஆட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிளாக இருந்தாலும், அழுகியதை யாரும் விரும்பி ஏற்பதில்லை என்பதை ஆட்டக்காரர்கள் உணர்ந்து கொண்டால், எவ்வளவு சிறப்பாக விளையாட்டுக்கள் வீறு நடைபோடும்?

காற்ருடி

காற்ருடி அதிக வேகமாக சுழல சுழலத்தான் காற்றும் அதிகமாக வரும் காற்ருடியின் மகிமை யும் பெருமையும் காற்ருடியை அனுபவிப்பவர் களுக்குப் புரியும். விளையாட்டுலகிலும் அப்படித் தான்.

விளையாட்டுத் திறன்களில் அதிகமாகப் பழகிக் கொள்ளத் தான், திறன்களில் நளினமும் லாவக மும் மிகுதியாகப் பெற முடியும். அப்பொழுதுதான் பார்வையாளர்களும் ஆட்டத்தை ஆர்வமுடன் பார்ப்பார்கள் ரசிப்பார்கள். ஆட்டக்காரர்களின் திறமையையும் புகழ்வார்கள் சுழலாத காற்ருடி வீட்டைச் சுற்றி இருந்து என்ன பயன்?