பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26
விளையாட்டுச் சிந்தனைகள்
 


தகுதியும், பிறர் ஏசுகின்ற முறையில் பகைவனுக்கு கின்ற சக்தியும் தனக்குத்தான் உண்டு என்று அவருக்குத் தெரிந்தால் மட்டும் போதாது தலைவ குைம் தகுதிக்கு உழைக்க வேண்டும் அதுவே சாதனை யுண்டாக்கும் வழியாகும்.

உண்மையான நண்பர்கள்

எதிர்க்குழுவில் நின்று எதிர்த்தாடுகின்ற ஆட்டக்காரர்களை, ஏன் எதிரிகள் என்று எண்ண வேண்டும்? அவர்கள் உங்களது உண்மையான திறனை, உள்ளிருக்கும் ஆற்றலை உலகுக்கு உணர்த்திக் காட்டுவதற்காக வந்த உற்ற நண்பர்கள் என்று ஏன் எண்ணி மகிழக்கூடாது!

நெருப்பில் விழுந்தால்தான் தங்கம் ஒளிர்கிறது. அடுப்பில் காய்ந்தால்தான் பாலில் சுவையேறு கிறது. போட்டி எனும் நெருப்பில் வீழ்ந்தால் தான் மனித சக்தியின் மகிமையையும் பெருமையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

முட்டாளும் முடிவும்

முட்டாள்கள் முடிவைப்பற்றியே எப்பொழு தும் சிந்திக்கிருர்கள். ஆனால், அறிவுள்ளவர்கள் அப்படி அல்ல. அந்தக் காரியத்தைப் பற்றிய காரணங்களை ஆராய்கின்ருர்கள். அறிகின்ருர்கள். அனுபவம் பெறுகின்ருர்கள். ஆனந்தம் அடைகின் ருர்கள். அதனல், நல்ல தெளிவையும் செயல் வலிவையும் பெறுகின்ருர்கள். பிறகு-முடிவு நல்ல தாகத்தானே இருக்கும்!