பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30
விளையாட்டுச் சிந்தனைகள்
 


சோம்பிக் கிடக்கும் உழவனைக் கண்டால், நிலமென்னும் நல்லாள் சிரிப்பாள் என்ருர் வள்ளுவர். இப்பொழுது தாய்த்திரு நாடு சிரித்துக் கொண்டிருக்கிறது

இனிமை விளையாடும்

பிறர் சொல்வதை மதித்துத் தான் கேட்டு நடிப்பது. செயல் படுவது. அதே போல், தான் சொல்கிறபோது பிறர் கேட்டுப் பணிவது. இப்படி ஒருவருக்கொருவர் சொல்லியும்கேட்டும், பணிந்தும் குழைந்தும் செயல்படும் போது கிடைக்கும் இன்பம் எத்தகையது என்பதை சொல்லில் விளக்கிட முடியாது. அனுபவ பூர்வமாக உணரும் போது தான் புரியும். அதை அனுபவ பூர்வமாக உணர்த்து வது விளையாட்டுக்கள்தான். இதை எல்லோரும் உணர்ந்து நடந்து கொண்டால் இனிமையான சூழ்நிலை எழுந்து நாட்டிலே விளையாடாதா?

குணம் காட்டும் கண்ணுடி

ஆற்றங்கரையிலே அம்மாவைப் பார்த்தால், வீட்டிலே போய் மகளைப் பார்க்க வேண்டாம் என்பது பழமொழி. பெண்பார்க்கப் போகும் பொழுது கூறப்படும் இப்பழ மொழியானது, தாயைப் போல பிள்ளை என்பதைக் குறிக்க வந்ததா

கும. o

ஆடுகளத்தில் விளையாடுகிற பொழுது ஒருவன் எப்படி நடந்து கொள்கிருன் என்று கண்டு கொண்டால், அவனது குணநலம் எப்படி இருக்கும்