பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32
விளையாட்டுச் சிந்தனைகள்
 


ஒரு முறை பரீட்சித்துப் பாருங்கள். உண்மை புரியும்

சந்தர்ப்பங்களின் சந்திப்பு

சந்தர்ப்பங்களுக்காகக் கா த் தி ரு ப் ப வ ன் சாதாரண மனிதன் வருகின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவன் வடி கட்டிய முட்டாள். ஆனால், புத்திசாலியோ சந்தர்ப் பங்களுக்காகக் காத்திருக்காமல், சந்தர்ப்பங்களை உண்டு பண்ணுகிருன் அதன் பிறகு, சாதித்தும் விடுகிருன்.

சந்தர்ப்பங்களை உண்டு பண்ணவும், ஏற்படு கின்ற சந்தர்ப்பங்களை எப்படி சமாளிப்பது என்பதையும், வெற்றி பெறும் விந்தை அனுபவங் களையும் உண்டு பண்ணி வழி நடத்துவது விளையாட்டுக்களாகவே இருக்கின்றன.விளையாட்டுக் களில் உண்டாகும் சந்தர்ப்பங்கள் சில சமயங்களில் வாழ்க்கையில் கூட ஏற்படுவதில்லை. ரயில்கள் பல சந்திக்கும் சந்திப்பு (JUNCTION) போல, சந்தர்ப்பங் கள் சந்திக்கின்ற சந்திப்பாக விளையாட்டு மைதானம் அமைந்திருக்கிறது.

ஒரு யூகம் தான்

சுற்றி இருந்து பலர் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே, விளையாட்டு மைதானத்துள் விதிகளை மீறி வேண்டுமென்றே தவறு செய்து ஆடு கின்ற ஒரு ஆட்டக்காரர், யாரும் பார்க்காத நேரத்தில், தவறு செய்யாமல் இருப்பார் என்று எவ்வாறு நம்ப முடியும்?